Published : 17 Sep 2025 06:36 AM
Last Updated : 17 Sep 2025 06:36 AM
சென்னை: நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.
‘இந்த தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி செப்.16 ஆகும். அபராத கட்டணம் ரூ.150 செலுத்தி செப்.17 (இன்று) முதல் 23-ம் தேதி வரையும், அபராத கட்டணம் ரூ.750 செலுத்தி செப்.24 முதல் 26-ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்’ என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், தொழில் நுட்பக் கல்வி ஆணையருமான இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் தேர்வுக்கு எந்த விதமான அபராத கட்டணமும் செலுத்தாமல் செப்.20-ம் தேதி வரையும், ரூ.150 அபராத கட்டணம் செலுத்தி செப்.21 முதல் 27-ம் தேதி வரையும், அபராத கட்டணம் ரூ.750 செலுத்தி செப்.28 முதல் அக்.6-ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்.
முதல் செமஸ்டர் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் மாணவர்களுக்கும் கடைசி வேலை நாள் அக்.3 என்பதற்கு பதிலாக, அக்.17 என மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் செமஸ்டர் தேர்வுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு விரிவான அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT