Published : 15 Sep 2025 06:32 AM
Last Updated : 15 Sep 2025 06:32 AM

மின்னணு கழிவுகளை கையாள்வதில் கவனம் தேவை: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

சென்னை: மின்​னணு கழி​வு​களை அறி​வியல் ரீதி​யாக நிர்​வகிப்​ப​தில் கல்​லூரி​கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்​டுமென யுஜிசி உத்​தர​விட்​டுள்​ளது. நம்​நாட்​டில் நிலு​வை​யில் உள்ள கோப்​பு​களை முறை​யாக முடிக்​க​வும், பொது சேவை வழங்​கல் மற்​றும் அலு​வலக தூய்​மையை மேம்​படுத்​த​வும் சிறப்பு பிரச்​சா​ரம் திட்​டத்தை மத்​திய அரசு முன்​னெடுத்​தது.

அதன்​படி சிறப்பு பிரச்​சா​ரம் 5.0 திட்​டத்​தின்​கீழ் உயர்​கல்வி நிறு​வனங்​கள் மேற்​கொள்ள வேண்​டிய விவ​காரங்​கள் குறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி தற்​போது சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

அதில், சிறப்பு பிர​சா​ரம் 5.0 திட்​டத்​தின்​கீழ் செப்​டம்​பர் 15 முதல் 30-ம் தேதி வரை ஆயத்த நிலை​யாக​வும், அக்​டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை செயல்​படுத்​தும் நிலை​யாக​வும் நிர்​ண​யித்து பணி​களை மேற்​கொள்ள உயர்​கல்வி நிறு​வனங்​களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்​ளது.

இந்த பிரச்​சா​ரத்​தில் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​வது, தேவையற்ற கழி​வு​களை அகற்​று​வது உள்​ளிட்​ட​வற்றை அடை​யாளம் கண்டு அந்த பணி​களில் ஈடு​படு​வது ஆகிய​வற்றை மேற்​கொள்​ளலாம். இந்த ஆண்டு மின்​னணு கழி​வு​களை அறி​வியல் ரீதி​யாக நிர்​வகிப்​பது எப்​படி என்​ப​தி​லும் சிறப்​பு கவனம்​ செலுத்​த வேண்​டும்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x