Published : 15 Sep 2025 06:20 AM
Last Updated : 15 Sep 2025 06:20 AM

இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் ‘கலாம் சபா’ - வி.டில்லிபாபு பெருமிதம்

சென்னை வியாசர்பாடியில் உள்ள கலாம் சபாவில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு உள்ளிட்டோர். படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் பணியை கலாம் சபா செய்து வருகிறது என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறினார். சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் பிறந்​தவர் ராணுவ விஞ்​ஞானி டில்​லி​பாபு. இவர் தனது இல்​லத்​தில், பள்​ளி, கல்​லூரி மாணவ, மாணவி​களுக்​கான ‘கலாம் சபா’ என்ற நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நிறு​வி​யுள்​ளார்.

இதை கடந்த ஆண்டு நவம்​பர் 8-ம் தேதி விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை திறந்​து​வைத்​தார். கலாம் சபா நூல​கம் சார்​பில் மாதாந்​திர வழி​காட்டி கூட்​டத் தொடரை​யும் டில்​லி​பாபு நடத்தி வரு​கிறார். சிறந்த ஆளு​மை​களை அழைத்​து, கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சிகளை​யும் அவர் நடத்தி வரு​கிறார். அதன் 7-வது நிகழ்​வாக நேற்று ‘படிப்​பது சுகமே’ என்ற தலைப்​பில் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

புதிய தலை​முறை தொலைக்​காட்சி அரசி​யல் பிரிவு ஆசிரியர் க.கார்த்​தி​கேயன், ஆளுமை சிற்பி மாத இதழ் ஆசிரியர் மெ.​ஞான​சேகர் ஆகியோர் பங்​கேற்​றனர். இதில் ராணுவ விஞ்​ஞானி டில்​லி​பாபு பேசி​ய​தாவது:‘கலாம் சபா’ செய்​தி​களை திரட்டி வைத்​திருக்​கும் நூல​க​மாக​வும், வழி​காட்டி மைய​மாக​வும், இளைஞர்​களை ஒன்​று​படுத்​தி, இந்​தி​யாவை அடுத்​தகட்​டத்​துக்கு அழைத்​துச் செல்​வது குறித்து யோசிக்​கும் மைய​மாக​வும் விளங்​கு​கிறது.

இப்​படிப்​பட்ட சூழலில், பல துறை​களை சேர்ந்த ஆளு​மை​களை அழைத்து பேச வைத்து வரு​கிறோம். கலாம் சபா​வின் நோக்​கம், இளைஞர்​கள் அனை​வரை​யும் விஞ்​ஞானிகளாக மாற்​று​வது இல்​லை. அவர​வர் என்​னென்ன கனவு​களை வைத்​திருக்​கிறார்​களோ, அந்த கனவு​களை எட்​டு​வதற்​கான சிறகை தைத்​துக் கொடுப்​பது​தான்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x