Published : 15 Sep 2025 05:40 AM
Last Updated : 15 Sep 2025 05:40 AM

பள்​ளி​களில் அமையும் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்கள்

சென்னை: மாணவர்​களுக்கு தொழில்​நுட்​பங்​களை பயிற்​று​விப்​ப​தற்​காக பள்​ளி​களில் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்​கள் அமைக்​கும் பணி​களை பள்​ளிக்​கல்​வித் துறை மேற்​கொண்டு வரு​கிறது. தமிழகத்​தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்​களுக்கு கணினி​சார் அடிப்​படை அறி​வியலை​யும், செயற்கை நுண்​ணறிவு திறனை​யும் கற்​பிக்​கும் வகை​யில் டிஎன்​ஸ்​பார்க் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கும் ஏஐ, ரோபோட்​டிக்ஸ் போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களை பயிற்​று​விக்​கும் நோக்​கில் பள்​ளிக்​கல்​வித் துறை இந்த திட்​டத்தை முன்​னெடுத்​துள்​ளது. இதன்படி வாரத்​துக்கு 2 பாட​வேளை​களில் ஏஐ, ரோபோட்​டிக்ஸ் வகுப்​பு​கள் நடக்கும். அதில்
சிறந்து விளங்​கும் மாணவர்​கள், நவீன தொழில்​நுட்ப ஆய்​வகத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பயிற்சி அளிக்​கப்​படு​வார்​கள்.

இதற்​காக, முதல்​கட்​ட​மாக மாவட்​டத்​துக்கு ஒன்று வீதம் மொத்​தம் ரூ.15 கோடி​யில் ரோபோட்​டிக்ஸ் ஆய்​வகங்​கள் அரசுப் பள்​ளி​களில் உரு​வாக்​கப்பட உள்​ளன. வரும் நவம்​பர் மாதத்​துக்​குள் இந்​தப் பணி​களை முடிக்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x