Published : 15 Sep 2025 12:24 AM
Last Updated : 15 Sep 2025 12:24 AM

முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ​முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர்​வதற்​கான கேட் நுழைவுத் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் செப்​டம்​பர் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டு உள்​ளது.

தேசிய அளவில் முன்​னிலை​யில் உள்ள ஐஐஎம் போன்ற உயர்​கல்வி நிறு​வனங்​களில் முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர பொது நுழைவுத் தேர்​வில் (Common Admission Test-CAT) தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த ஆண்​டுக்​கான ‘கேட்’ தேர்வு நாடு முழு​வதும் 170 மையங்​களில் நவம்​பர் 30-ம் தேதி கணினி வழி​யில் நடை​பெற உள்​ளது. இத்​தேர்வை கோழிக்​கோடு ஐஐஎம் நடத்​துகிறது. காலை 8.30-10.30, மதி​யம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்​தம் 3 அமர்​வு​களாக தேர்வு நடை​பெறும்.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ல் தொடங்கி செப்​டம்​பர் 13-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்​நிலை​யில், மாணவர்​கள் நலன்​கருதி விண்​ணப்​பிக்​கும் அவகாசம் செப்​டம்​பர் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. விருப்​பம் உள்ள பட்​ட​தா​ரி​கள் https://iimcat.ac.in எனும் வலை​தளத்​தில் துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும்.

இதற்கு கட்​ட​ண​மாக எஸ்​சி, எஸ்டி பிரி​வினர், மாற்​றுத் திற​னாளி​கள் ரூ.1,300, மற்ற தேர்​வர்​கள் ரூ.2,600 செலுத்த வேண்​டும். தகு​தி​யானவர்​களுக்கு ஹால் ​டிக்​கெட் நவம்​பர் 5-ம் தேதி வெளி​யிடப்பட உள்​ளது.தேர்வு முடிவு​கள் ஜனவரி முதல் வாரத்​தில் வெளி​யிடப்​படும் என்று துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x