Published : 14 Sep 2025 01:28 AM
Last Updated : 14 Sep 2025 01:28 AM

டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு: யுஜிசி உத்தரவு

சென்னை: கல்​லூரி​கள் இணை​யக் குற்​றங்​கள் மற்​றும் டிஜிட்​டல் பாது​காப்பு தொடர்​பாக, மாணவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும் என்று யுஜிசி உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்​து, பல்​கலைக்​கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி, உயர்​கல்வி நிறு​வனங்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை: நாடாளு​மன்ற நிலைக்​குழு தனது 254-ம் அறிக்​கை​யில், உயர்​கல்வி நிறு​வனங்​களில், தொழில்​நுட்​பம்அல்​லாத பாடத் திட்​டங்​களி​லும்,சைபர் பாது​காப்பு அறி​முகப்​படுத்​தப்பட வேண்​டும் என்று பரிந்​துரைத்​துள்​ளது.

குறிப்​பாக, இணைய குற்​றங்​கள் குறித்த விழிப்​புணர்​வு, டிஜிட்​டல் பாது​காப்​பு, பொறுப்​பான ஆன்​லைன் நடத்தை மற்​றும் தரவு தனி​யுரிமை குறித்த அடிப்​படை அம்​சங்​களை பயிற்​று​விக்க அறி​வுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த பரிந்​துரைகளுக்கு ஏற்ப உரிய வழிகாட்டுதல்படி மாணவர்​கள், ஆசிரியர்​களுக்கு இணை​யக் குற்​றங்​கள் மற்​றும் டிஜிட்​டல் பாது​காப்பு தொடர்​பாக கல்​லூரி​கள் விழிப்​புணர்வுஏற்​படுத்த வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x