Published : 13 Sep 2025 05:46 AM
Last Updated : 13 Sep 2025 05:46 AM

டெட் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: ஆசிரியர் பணி தகுதிக்கான டெட் தேர்வு எழுத 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்​தில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் டெட் தேர்வு நடத்​தப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான டெட் தேர்வு நவம்​பர் 15, 16-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஆக. 11-ம் தேதி தொடங்கி செப்​. 10-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. தேர்வு எழுத 4.80 லட்​சம் பேர் வரை விண்​ணப்​பித்​துள்​ளனர்.

இதற்​கிடையே, பணி​யில் உள்ள ஆசிரியர்​கள் அனை​வருக்​கும் டெட் தேர்ச்சி கட்​டா​யம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதன் காரண​மாக, தற்​போது நடை​பெற உள்ள டெட் தேர்வை எழுது​வதற்கு ஆயிரக்​கணக்​கான ஆசிரியர்​களும் விண்​ணப்​பித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. மேலும், டெட் தேர்வு விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்​வதற்​கான அவகாசம் இன்​றுடன் (செப்​. 13) நிறைவு பெற உள்ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x