Published : 10 Sep 2025 12:34 AM
Last Updated : 10 Sep 2025 12:34 AM

ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு: 3.80 லட்சம் பேர் விண்ணப்பம்; காலக்கெடு இன்று மாலை முடிவடைகிறது

சென்னை: ‘டெட்’ தேர்​வுக்கு இது​வரை 3 லட்​சத்து 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான காலக்​கெடு இன்று (புதன்) மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

மத்​திய அரசு கொண்​டு​வந்த இலவச கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின்​படி ஒன்​றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு (டெட்) தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி இடைநிலை ஆசிரியர்​கள் ‘டெட்’ தாள்-1 தேர்​விலும், பி.எட் முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ‘டெட்’ தாள்​-2-லும் தேர்ச்சி பெற வேண்​டும். 2025-ம் ஆண்​டுக்​கான ‘டெட்’ தேர்வு நவ.15 மற்​றும் 16-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவு ஆக.11-ம் தேதி தொடங்​கியது. விண்​ணப்​பிக்க கடைசி தேதி செப்​.8-ம் தேதி முடிவடைய இருந்த நிலை​யில், விண்​ணப்​ப​தா​ரர்​களின் வேண்​டு​கோளை ஏற்று கடைசி தேதியை ஆசிரியர் தேர்வு வாரி​யம் செப்​.10-ம் தேதி (இன்​று) மாலை 5 மணி வரை நீட்​டித்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை நில​வரப்​படி 3 லட்​சத்து 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் ‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பித்​திருப்​ப​தாக ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் உயர் அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்.

‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​பும் ஆசிரியர்​கள் டிஆர்பி இணை​யதளத்தை (www.trb.tn.gov.in) பயன்​படுத்தி இன்று மாலை 5 மணி வரை விண்​ணப்​பிக்​கலாம். தற்​போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவர்​களும், பி.எட் 2-ம் ஆண்டு படிப்​பவர்​களும் ‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம். தேர்​வில் தேர்ச்சி பெறும் பட்​சத்​தில் அவர்​கள் தங்​கள் படிப்பை முடித்த பிறகு ‘டெட்’ தேர்ச்சி சான்​றிதழை பெற்​றுக்​கொள்​ளலாம்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x