Published : 09 Sep 2025 06:07 AM
Last Updated : 09 Sep 2025 06:07 AM

‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்​வுக்​கான (டெட்) ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்​கியது. இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் விண்​ணப்​பித்து வந்​தனர். தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நேற்று முடிவடைந்​தது. இந்​நிலை​யில், தேர்​வர்​களின் வேண்​டு​கோளை ஏற்​று, இந்த அவகாசம் நாளை (செப்​.10) வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​வரை விண்​ணப்​பிக்​காத ஆசிரியர்​கள் www.trb.tn.gov.in என்ற இணை​யதளம் மூல​மாக நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வாரி​யம் ஏற்​கெனவே அறி​வித்​த​படி, நவம்​பர் 15-ம் தேதி டெட் முதல் தாள் தேர்​வும், 16-ம் தேதி 2-ம் தாள் தேர்​வும் நடை​பெற உள்​ளன.

தேர்வு முடிவு​களை விரை​வில் வெளி​யிட​வும், அதை தொடர்ந்து டிசம்​பர் மாதத்​திலேயே பட்​ட​தாரி ஆசிரியர் பணி நியமனத்​துக்​கான போட்​டித் தேர்வை நடத்​த​வும் ஆசிரியர் தேர்வு வாரி​யம்​ திட்​ட​மிட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x