Published : 09 Sep 2025 12:44 AM
Last Updated : 09 Sep 2025 12:44 AM
சென்னை: மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சிடெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இரண்டு தாள்கள் கொண்ட இத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்தி வருகிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பாணை ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://ctet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் நேரடி முறையில் தேர்வு நடைபெறும். தேர்வு கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT