Published : 07 Sep 2025 12:41 AM
Last Updated : 07 Sep 2025 12:41 AM

பழங்குடியினரின் கல்விப் புரட்சி; இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் - கல்வி விளக்கேற்றிய பழங்குடியினர் நலத்துறை

தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற பழங்குடியின மாணவர்களை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பாராட்டினர்.

சமூகநீ​திக் கொள்​கைகளை செயல்​வடி​வில் சாத்​தி​ய​மாக்​கியதற்கு சான்​றுகளில் ஒன்​றாக பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் கல்​வி​சார் சாதனை​கள் விளங்​கு​கின்​றன. இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக, பழங்​குடி​யின மாணவர்​களின் கல்வி வாழ்க்​கை​யில் ஒரு பிரம்​மாண்​ட​மான புரட்​சியை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது. 2025-ம் ஆண்டு தேசிய அளவில் நடை​பெற்ற போட்​டித் தேர்​வு​களில், பழங்​குடி​யினர் உண்டு உறை​விடப் பள்ளி மாணவர்​கள் ஈட்​டி​யிருக்​கும் வெற்​றிகள், ஒரு நீண்​ட​கால கனவின் நனவாக வெளிப்​பட்​டுள்​ளன.

கடந்த ஆண்​டை​விட கூடு​தலாக 20 மடங்கு அளவுக்கு கிடைத்​துள்ள இந்த வெற்​றிகளில் குறிப்​பிடத்​தக்க சில மைல்​கற்​கள் நம் கவனத்தை ஈர்க்​கின்​றன. அதன்​படி மாணவி ராஜேஸ்​வரி, சென்னை ஐஐடி​யில் விண்​வெளிப் பொறி​யியல் துறை​யில் சேர்ந்​திருப்​பதும் கடல்​சார் பல்​கலைக்​கழகம் மற்​றும் சென்னை ஐஐடி-​யில் போன்ற உயரிய கல்வி நிறு​வனங்​களில் பழங்​குடி​யின மாணவி​கள் முதன்​முறை​யாக இடம் பிடித்​திருப்​பதும் பழங்​குடி சமூகத்​தில் பெண்​கள் அடைந்​திருக்​கும் முன்​னேற்​றத்தை வெளிப்​படுத்​துகிறது.

இந்த சாதனை​களின் பின்​னணி​யில், பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் தொடர்ச்​சி​யான, அர்ப்​பணிப்பு உள்​ளது. மாணவர்​களுக்கு தொடர்ந்து பயிற்சி வகுப்​பு​களும் ஆயத்​தப் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட்​டது. மேலும் ஆங்​கில மொழிப் புலமை, ஆளுமை மேம்​பாடு, குழு விவாதம் போன்ற திறன்​களை வளர்க்​க​வும் 15 நாட்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நீதி என்​பது அனை​வருக்​கும் சம வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வது என்​பதை இந்​திய சமூக அமைப்​புக்கே ஒரு புதிய திசையை பழங்​குடி​யினர் நலத்​துறை காட்​டி​யுள்​ளது.

அரசு ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறைச் செய​லா​ளர் லட்​சுமி பிரியா ஐஏஎஸ் கூறும்​போது, “மாணவர்​களின் இந்​தச் சாதனைக்​குத் தமிழக முதல்​வர் ஆசிரியர்​களுக்கு முதல் நன்றி சொல்ல வேண்​டும். உயர்​கல்வி சேர்க்​கைக்​கான பயிற்​சி​யை​யும் நிதி​யைத் தடை​யின்றி அரசு வழங்​கியது. இதன் விளை​வாக, மாணவர்​கள் இலக்கை அடைந்​தனர். எல்​லாத் தடைகளை​யும் தகர்த்​து, மாணவர்​கள் சாதித்​துள்​ளனர்” என்​றார்.

கிருஷ்ணவேணி (கரியகோ​யில்​வளவு): பள்​ளி​யில் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கிடைத்த பயிற்சி மற்​றும் திறன் பயிற்​சிகள் பயனுள்​ள​தாக இருந்​தன. இந்த முயற்​சிகள் எங்​கள் சமூகத்​துக்கு நம்​பிக்​கையை அளித்​துள்​ளது. அதன் விளை​வாக, எனக்கு ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்​கலைக்​கழகத்​தில் ஏவி​யானிக்ஸ் இன்​ஜினியரிங் படிக்க இடம் கிடைத்​துள்​ளது.

ஆதித்​யன் (செங்​கரைப்​பள்​ளி): எனக்கு ஒரு புதிய பாதையைத் திறந்​து​வைத்த என் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர், இத்​துறை​யின் இயக்​குநர், மற்​றும் தமிழ்​நாடு அரசுக்கு என் மனமார்ந்த நன்​றி. இப்​போது நான் இந்​திய கடல்​சார் பல்​கலைக்​கழகத்​தில் (கொல்​கத்​தா) பி.டெக், கடல்​சார் பொறி​யியல் படித்து வரு​கிறேன்.

ஞானபிர​காசம்: அம்மா தினக்​கூலி வேலை பார்க்​கிறார். எங்​கள் குடும்​பத்​தின் ஒட்​டுமொத்த நம்​பிக்கை கல்வி மட்​டுமே. எனக்​குக் கிடைத்த இந்த வாய்ப்பு எங்​கள் குடும்​பத்​தின் நிதி நிலையை மேம்​படுத்​தும் என்று நம்​பு​கிறேன். இந்தஅரிய வாய்ப்பை வழங்​கிய அரசுக்​கும், துறைச் செய​லா​ளர் மற்​றும் இயக்​குநருக்​கும் எனது நன்​றிகள்.

இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை இன்ஸ்டிட்யூட்டில் சேர்க்கைப் பெற்ற பழங்குடி மாணவர்கள்.

எட்டாத உயர்கல்வியை எட்டிப்பிடித்த பழங்குடி மாணவர்கள்: தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் 42 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதேபோல் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் - 39 பேர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்- 3, கிளாட் தேர்வு - 3, இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம்- 10, தேசிய ஹோட்டல் மேலாண்மை நிறுவனம்- 2, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்- 9, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்- 6, ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம்- 9, ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனம்- 4, பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி- 16, அண்ணா பல்கலைக்கழகம்- 6, புதுச்சேரி பல்கலைக்கழகம்- 8, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்- 1, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பாகல்பூர்- 3, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம்- 1, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஐடி, கோரக்பூர் - ஒரு மாணவர் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x