Published : 06 Sep 2025 05:58 AM
Last Updated : 06 Sep 2025 05:58 AM

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

சென்னை: சித்​தா, ஆயுர்​வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியலை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்​டார். கன்​னி​யாகுமரி மாவட்ட மாணவி தரவரிசை பட்​டியலில் முதலிடம் பிடித்​துள்​ளார். இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை​யின்​கீழ் அரும்​பாக்​கம் அறிஞர் அண்ணா அரசு இந்​திய மருத்​து​வமனை வளாகத்​தில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, யுனானி மருத்​து​வக் கல்​லூரி செயல்​படு​கின்​றன.

அதே​போல், திருநெல்​வேலி மாவட்​டம் பாளை​யங்​கோட்​டை​யில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​தில் ஹோமியோபதி மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டம் நாகர்​கோ​வில் அருகே கோட்​டாறில் ஆயுர்​வேத மருத்துவக் கல்​லூரி உள்​ளன.

இந்த 5 அரசு கல்​லூரி​களில் உள்ள 320 இடங்​களில், அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு 48 இடங்​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. மீத​முள்ள 272 இடங்​கள் மாநில அரசுக்கு உள்​ளது. இவைத​விர 29 தனி​யார் கல்​லூரி​களில் 1,920 இடங்​கள் உள்​ளன. அதில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்​கீட்​டுக்கு வழங்​கப்​படு​கிறது. மீத​முள்ள இடங்​களில் 65 சதவீதம் மாநில அரசுக்​கும், 35 சதவீதம் நிர்​வாக ஒதுக்கீட்டுக்கும் உள்​ளன.

நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்​றவர்​களுக்கு அரசு ஒதுக்​கீடு இடங்​கள், நிர்​வாக ஒதுக்​கீடு இடங்​கள் மற்​றும் தனி​யார் கல்​லூரி​களின் அகில இந்​திய ஒதுக்​கீடு இடங்​களுக்கு மாநில அரசு கலந்​தாய்வு நடத்தி வரு​கிறது. அரசு கல்​லூரி​களின் அகில இந்​திய ஒதுக்கீட்டுக்​கான 15 சதவீத இடங்​களுக்கு மட்​டும் மத்​திய அரசு கலந்​தாய்வு நடத்​துகிறது.

இந்​நிலை​யில் நேற்று சென்னை கிண்​டி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் தகு​தி​யானவர்​களின் தரவரிசை பட்​டியல்​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்​டார். துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை ஆணை​யர் விஜயலட்​சுமி, இணை இயக்​குநர் மணவாளன், தேர்​வுக்​குழு செயலர்கரோலின், எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தின் துணை வேந்​தர் நாராயண​சாமி உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

தரவரிசை பட்​டியல்​கள் https://tnhealth.tn.gov.in/ என்ற சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. கன்னியாகுமரி மாவட்ட மாணவி அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான தரவரிசைப் பட்​டியலில் 4,371 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.

இதில், நீட் தேர்​வில் 720-க்கு 520 மதிப்​பெண் எடுத்த கன்​னி​யாகுமரி மாவட்ட மாணவி டி.எஸ்​.பிரகதி முதலிடம் பெற்​றுள்​ளார். 512 மதிபெண்​களு​டன் ஜி.டி.இனிய சுதர்​சன் 2-ம் இடத்​தை​யும், 509 மதிப்​பெண்​களு​டன் ஆர்​.​பாவேஷ் 3-ம் இடத்​தை​யும் பிடித்​தனர்.

தனி​யார் கல்​லூரிகளின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான தரவரிசைப் பட்​டியலில் 1,430 பேரும் தனி​யார் கல்​லூரி​களின் நிர்​வாக ஒதுக்கீட்டு இடங்களுக்​கான பட்​டியலில் 1,860 பேரும் இடம்​பெற்​றுள்​ளனர்.

அரசு ஒதுக்​கீட்​டுக்கு மொத்​தம் உள்ள இடங்​களில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின்​கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 97 இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன. தரவரிசைப் பட்​டியலில் 425 மதிப்​பெண்​களு​டன் ஜி.​பாவனா முதலிடத்​தை​யும், 423 மதிப்​பெண்​களு​டன் என்​.அருண்​கு​மார் 2-ம் இடத்​தை​யும், எஸ்​.அன்​பரசி 3-ம்​ இடத்​தை​யும்​ பிடித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x