Published : 06 Sep 2025 02:23 AM
Last Updated : 06 Sep 2025 02:23 AM

மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் புதிய இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்

சென்னை: மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் இயக்​குந​ராக சுகந்தி ராஜகு​மாரி நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

தமிழக அரசின் மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் இயக்​குந​ராக (டிஎம்இ) இருந்த சங்​குமணி கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்​றார். புதிய இயக்​குநரை நியமிப்​ப​தற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தன.

இந்​நிலை​யில், திண்​டுக்​கல் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீனாக இருந்த சுகந்தி ராஜகு​மாரியை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் இயக்​குந​ராக நியமித்து சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார் உத்​தர​விட்​டுள்​ளார். இதையடுத்து நேற்று மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் இயக்​குந​ராக சுகந்தி ராஜகு​மாரி பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்கு சூரங்​குடி கிராமத்​தைச் சேர்ந்த சுகந்தி ராஜகு​மாரி, கடந்த 36 ஆண்​டு​களாக மருத்​து​வக்​கல்வி பணி​யில் உள்​ளார். தமிழகத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் தோல் மருத்​து​வத் துறை​யில் பேராசிரியர் மற்​றும் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய அவர், கடந்த 2019-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று கன்​னி​யாகுமரி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீனாக பொறுப்​பேற்​றார்.

பின்​னர், திண்​டுக்​கல் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீனாக பதவி வகித்​தார். மருத்​து​வக் கல்வி, ஆராய்ச்சி இயக்​ககத்​தின் கூடு​தல் இயக்​குந​ராக​வும் பதவி வகித்​துள்​ளார். தற்​போது இயக்​ககத்​தின் இயக்​குந​ராக பொறுப்​பேற்​ற சுகந்தி ராஜகு​மாரிக்​கு, சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள், டீன்​கள், மருத்​து​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

மருத்​து​வர் சுகந்தி ராஜகு​மாரியின் கணவர் ஐசக் மோகன்​ லால் உச்ச நீதி​மன்​றம் மற்​றும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் மூத்த வழக்​கறிஞர். மூத்த மகள் அபிஷா ஐசக் சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் வழக்​கறிஞ​ராக​வும் இளைய மகள் அனிஷா ஐசக் கண் மருத்​துவ​ராகவும்​ உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x