Published : 04 Sep 2025 05:52 AM
Last Updated : 04 Sep 2025 05:52 AM

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் பாராட்டு

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பியுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்தில் 12, 10-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி​பெறும் பள்ளி​களுக்​கும், தமிழ்ப் பாடத்​தில் 100 மதிப்​பெண்​கள் பெற்ற மாணவர்​களுக்​கும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கும் விழா திருச்சியில் செப்​. 7-ல் நடை​பெறவுள்​ளது.

திருச்சி காட்​டூரில் உள்ள மான்​போர்ட் பள்​ளி​யில் செப். 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடை​பெறவுள்ள விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்​கள், மாணவர்​கள், உரிய அடை​யாளச் சான்​றுடன் வரு​வதற்​கு ஏற்​பாடு​ செய்ய வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x