Published : 01 Sep 2025 01:12 AM
Last Updated : 01 Sep 2025 01:12 AM

அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்: பள்​ளிக்​கல்​வித் துறை புதிய அறிவுறுத்தல்

சென்னை: தமிழக அரசுப் பள்​ளி​களில் உள்ள பள்ளி மேலாண்​மைக் குழுக்​களின் (எஸ்​எம்​சி) குழு உறுப்​பினர்​களின் வரு​கையை பதிவு செய்​யும் முறை​யில் சில மாற்​றங்​களை பள்​ளிக்​கல்​வித் துறை செய்​துள்​ளது.

அதன்​படி, வரு​கைப் பதிவு செயலி​யில், கூட்​டத்​தில் பங்​கேற்​றவர், பங்​கேற்​காதவர் ஆகிய​வற்​றுடன் கூடு​தலாக ‘காலி​யிடம்’ என்ற பிரி​வும் சேர்க்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​களின் பதவிக் காலம் முடிவடைந்​துள்​ள​தால், கூட்​டத்​தில் அவர்​கள் பங்​கேற்க தேவை​யில்​லை. ஒரு​வேளை, அவர்​கள் விரும்​பி​னால் கூட்​டத்​தில் பங்​கேற்க அனு​ம​திக்​கலாம். ஆனால், அவர்​களின் வரு​கையை பதிவு செய்ய வேண்​டாம். அதற்கு மாறாக, செயலி​யில் காலி​யிடம் என்று குறிப்​பிட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதை பின்​பற்றுமாறு தலைமை ஆசிரியர்​களுக்கு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x