Published : 25 Aug 2025 05:21 AM
Last Updated : 25 Aug 2025 05:21 AM

பொறியியல் கலந்தாய்வு முடிவில் 37,000 இடங்கள் காலி

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சேர்க்கை கலந்​தாய்வு முடி​வில் 37,179 இடங்​கள் காலி​யாக உள்​ள​தாக தகவல் கிடைத்துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 423 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்​சத்து 90,624 அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் உள்​ளன. இவற்றை நிரப்​புவதற்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள காலி இடங்​களை நிரப்​புவதற்​கான துணை கலந்​தாய்வு ஆக. 21-ம் தேதி தொடங்​கியது.

இதில் பங்​கேற்க 20,662 மாணவர்​கள் தகு​திபெற்​றனர். அவர்​களில், விருப்​பக் கல்​லூரியை தேர்வு செய்​தவர்​களுக்​கான இறுதி ஒதுக்​கீடு ஆணை நேற்று வெளி​யிடப்​பட்​டது. அதன்​படி, பொதுப் பிரி​வில் 7,767 பேர், தொழிற்​கல்வி பொதுப் பிரி​வில் 165 பேர், 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் 32 பேர் என 7,964 பேருக்கு துணை கலந்​தாய்​வில் இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன.

பொறி​யியல் கலந்​தாய்வு: இறு​தி​கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில், ஒட்​டுமொத்​த​மாக ஒரு லட்​சத்து 53,445 இடங்​கள் நிரம்​பி​யுள்​ளன. இன்​னும் 37,179 இடங்​கள் காலி​யாக உள்​ளன. இந்​நிலை​யில், எஸ்​சி, எஸ்டி பிரிவுக்​கான கலந்​தாய்வு இன்று நடை​பெறுகிறது.

மாணவர்​கள் மாலை 7 மணி வரை தங்​களுக்​கான விருப்​பக் கல்​லூரியை தேர்வு செய்​ய​லாம். அவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு நாளை (ஆக.26) வெளி​யிடப்​படும். அதை உறுதி செய்​பவர்​களுக்கு 27-ம் தேதி இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x