Published : 25 Aug 2025 05:03 AM
Last Updated : 25 Aug 2025 05:03 AM

பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு

சென்னை: பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்டசுற்றறிக்கை: அமைச்​சுப் பணி​யாளர்​களுக்கு 2 சதவீத ஒதுக்​கீட்​டின்​படி முது​நிலை ஆசிரியர்​களாக பணி​மாறு​தல் அளிக்க வேண்டி சென்னை உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்​கு தொடரப்பட்டது.

நீதி​மன்ற உத்​தர​வின்​படி அவர்​களை பணி விடு​விப்பு செய்ய வேண்​டும். அவர்​கள் பட்​ட​தாரி ஆசிரியர் பதவிக்​குரிய கல்​வித் தகுதியை அவர்​கள் பெற்​றுள்​ளனரா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் தொடர்ச்சியாக அதன்படி நீதி​மன்ற தீர்ப்பை செயல்​படுத்​தும் வகை​யில் தகு​தி​யான 39 அமைச்​சுப் பணி​யாளர்​களுக்கு முதுநிலை ஆசிரியர்​களாக பதவி உயர்வு வழங்கி அவர்​களுக்​கான அரசுப் பள்​ளி​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x