Published : 20 Aug 2025 06:16 AM
Last Updated : 20 Aug 2025 06:16 AM

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, சென்சார் சோதனை பயிற்சி: தாட்கோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை: ஆ​தி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின பொறி​யியல் பட்​ட​தா​ரி​களுக்​கும், டிப்​ளமா முடித்​தோருக்​கும் ட்ரோன் தயாரிப்​பு, எம்​பெட்​டெட் சென்​சார் சோதனை உள்​ளிட்ட பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ள​தாக, தமிழக அரசின் தாட்கோ நிறு​வனம் தெரிவித்துள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக்​கழக (தாட்​கோ) மேலாண் இயக்​குநர் கே.எஸ்.கந்தசாமி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தாட்கோ நிறு​வனம், சென்​னை​யில் உள்ள முன்​னணி தொழில்​நுட்ப பயிற்சி நிறு​வனத்துடன் இணைந்து ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின இளைஞர்​களுக்​கு ட்ரோன் தயாரிப்​பு, கூட்​டமைப்​பு, சோதனை மற்றும் பறக்​கும் தொழில்​நுட்ப பயிற்​சி, எம்​பெட் டெட் சென்​சார் சோதனை பயிற்​சி, பிரிண்​டட் சர்க்​யூட் போர்டு வடிவ​மைப்பு பயிற்​சி, பொறி​யியல் பட்​ட​தா​ரி​களுக்​கான வேலை​வாய்ப்பு பயிற்சி திட்​டம் ஆகிய பயிற்​சிகளை அளிக்க உள்​ளது.

ட்ரோன் தயாரிப்​பு, கூட்​டமைப்​பு, சோதனை மற்​றும் பறக்​கும் தொழில்​நுட்ப பயிற்​சிக்கு ஏதேனும் ஒரு பட்​டப்​படிப்பு முடித்​திருக்க வேண்​டும், எம்​பெட்டெட் சென்​சார் சோதனை பயிற்​சி, பிரிண்​டட் சர்க்​யூட் போர்டு வடிவ​மைப்பு பயிற்​சி, பொறி​யியல் பட்டதாரிகளுக்​கான வேலை​வாய்பு பயிற்சி ஆகிய​வற்​றுக்​கு, பொறி​யியலில் ஏதேனும் ஒரு பாடப்பிரி​வில் பட்​டம் அல்​லது டிப்​ளமோ பெற்​றிருக்க வேண்​டும்.

வயது 18 முதல் 35 வயதுக்​குள் இருக்க வேண்​டும். குடும்ப ஆண்டு வரு​மானம் ரூ.3 லட்​சத்​திற்​குள் இருக்க வேண்​டும். தங்​கும் விடுதி மற்​றும் உணவு உட்பட பயிற்​சிக்​கான அனைத்து செல​வினங்​களும் தாட்கோ மூல​மாக வழங்​கப்​படும். மேற்​கண்ட பயிற்​சிகளில் சேர விரும்​பும் தகு​தி​யுள்ள ஆதி திரா​விடர்​-பழங்​குடி​யின வகுப்​பைச் சேர்ந்த இளைஞர்​கள் தாட்கோ இணை​யதளத்​தின் (www.tahdco.com) மூலம் பதிவுசெய்து விண்​ணப்​பிக்​கலாம். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x