Published : 20 Aug 2025 12:19 AM
Last Updated : 20 Aug 2025 12:19 AM

பொறியியல் துணை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது: 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்வு நாளை தொடங்​கு​கிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26), பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்​வின் இறுதி சுற்று தற்​போது நடை​பெற்று வரு​கிறது. இதில் கலந்​து கொண்டு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்​களுக்கு இன்று (20-ம் தேதி) இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்பட உள்​ளது.

இதற்​கிடையே, பிளஸ் 2 துணை தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​கள், பொது கலந்​தாய்​வில் பங்​கேற்க தவறிய மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான துணை கலந்​தாய்வு நாளை (21-ம் தேதி)தொடங்கி 23-ம் தேதி வரை இணை​ய​வழி​யில் நடை​பெறுகிறது. இதற்கு 16 ஆயிரம் மாணவர்​கள் விண்​ணப்​பி்த்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

துணை கலந்​தாய்வு முடிவடைந்த பிறகு, பொறி​யியல் படிப்​பில் எஸ்சி அருந்​த​தி​யர் ஒதுக்​கீட்​டில் உள்ள காலி​யிடங்​களில், எஸ்சி மாணவர்​கள் சேரு​வதற்​கான சிறப்பு கலந்​தாய்வு வரும் 25, 26-ம் தேதி நடை​பெறும். 26-ம் தேதி​யுடன் ஒட்டு மொத்த கலந்​தாய்வு பணி​கள்​ முடிக்​கப்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x