Published : 18 Aug 2025 06:19 AM
Last Updated : 18 Aug 2025 06:19 AM

சங்கர நேத்ராலயா எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனத்தின் சென்னையில் 4-வது சர்வதேச பார்வை அறிவியல், ஒளியியல் மாநாடு

சங்கர நேத்ராலயா எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனத்தின் 4-வது சர்வதேச பார்வை அறிவியல் மற்றும் ஒளியியல் மாநாடு தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி காந்த், சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், ஆட்சிக் குழுத் தலைவரும் செயல் மருத்துவ இயக்குநருமான டாக்டர் கிரிஷ் ஷிவா ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: சங்கர நேத்​ராலயா எலைட் ஆப்​டோமெட்ரி கல்வி நிறு​வனத்​தின் 4-வது சர்​வ​தேச பார்வை அறி​வியல் மற்​றும் ஒளியியல் மாநாடு (EIVOC) சென்​னை​யில் நடை​பெற்​றது. கண் மருத்​து​வத் துறை​யில் முன்​னோடி அடை​யாள​மான சென்னை சங்கர நேத்​ரால​யா​வின் ஒரு குறிப்​பிடத்​தக்க அங்​க​மான எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்​டோமெட்ரி 1985-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

இது முதல் முன்​னோடி ஒளி​யியல் மருத்​து​வக் கல்​லூரி​யாக​வும், 4 ஆண்டு தொழில்​முறை பட்​டத்தை வழங்​கும் முதல் கல்லூரியாகவும் விளங்​கு​கிறது. எலைட் ஆப்​டோமெட்ரி கல்வி நிறு​வனம் 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை சர்​வ​தேச பார்வை அறி​வியல் மற்​றும் ஒளி​யியல் மாநாட்டை நடத்தி வரு​கிறது.

அந்த வகை​யில் இதன் 4-வது மாநாடு ஆக.15, 16, 17 தேதி​களில் சென்னை வர்த்தக மையத்​தில் நடை​பெற்​றது. 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பிர​தி​நி​தி​கள், 60-க்​கும் மேற்​பட்ட இந்​திய மற்​றும் சர்​வ​தேச கண்​ணி​யல் நிபுணர்​கள் வழங்​கும் சொற்​பொழி​வு​களு​டன் ஆப்​டோமெட்ரி மற்​றும் பார்வை அறி​வியல் சமூகத்​துக்​கான உயர்தர தளத்தை அமைக்​கும் மாநா​டாக இது நடை​பெற்​றது.

“தொலைநோக்கு தலை​மை: கண் பராமரிப்​பின் எதிர்​காலத்தை வடிவ​மைக்​கும் கண் ஒளி​யிய​லா​ளர்​கள்” என்ற கருப்​பொருளில் நடை​பெற்ற இம்​மா​நாட்​டில் உலகின் முன்​னணி பல்​கலைக்​கழகங்​கள், முக்​கிய மூக்​குக் கண்​ணாடி நிறு​வனங்​களின் வல்லுநர்கள், மாணவர்​கள் பங்​கேற்​றனர். 60-க்​கும் மேற்​பட்ட நிபுணர்​கள் பல்​வேறு தலைப்​பு​களில் உரை​யாற்​றி​னார். 10 புதிய பாடப்​புத்​தகங்​கள் வெளி​யிடப்​பட்​டன.

மேலும் புதிய இணை​யதளம், டிஜிட்​டல் ஆய்​வுக்​கூடம், முக்​கிய ஆப்​டோமெட்ரி தகவல்​களை வழங்​கும் மொபைல் செயலி ஆகியவை​யும் வெளி​யிடப்​பட்​டன. தொடக்க விழா​வில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​ட​னும் தற்​போதைய பயிற்​சியாள​ரும் விஷன் 2020: பார்வை உரிமைக்​கான நல்​லெண்​ணத் தூதரு​மான கிருஷ்ண​மாச்​சாரி ​காந்த் கலந்​து​கொண்​டார். மறு நாள் நடை​பெற்ற விளை​யாட்டு ஆப்​டோமெட்ரி ஆய்​வக அறி​முக விழா​வில் ​காந்த் இணை​ய ​வழி​யாக பங்​கேற்று தொடங்கி வைத்​தார்.

சங்கர நேத்​ராலயா தலை​வர் டாக்​டர் டி.எஸ்​.சுரேந்​திரன், ஆட்​சிக் குழுத் தலை​வரும் செயல் மருத்​துவ இயக்​குநரு​மான டாக்​டர் கிரிஷ் ஷிவா ராவ், கவுரவ செய​லா​ளர் ஜி.​ராமச்​சந்​திரன், எலைட் ஆப்​டோமெட்ரி கல்வி நிறு​வனம், தி சங்கர நேத்​ராலயா அகாடமி முதல்​வர் மற்​றும் மா​நாட்​டின் தலை​மைப் பொறுப்​பாளர்​ என்​.அனு​ரா​தா உள்ளிட் ​டோர்​ பங்​கேற்​றனர்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x