Published : 17 Aug 2025 12:50 AM
Last Updated : 17 Aug 2025 12:50 AM

இளநிலை யோகா மருத்துவ படிப்புக்கு 4,200 பேர் விண்ணப்பம்

சென்னை: இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வப் படிப்​புக்கு 4,200-க்​கும் மேற்​பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

​தரவரிசைப் பட்​டியல் அடுத்த வாரம் வெளி​யிடப்​படு​கிறது. ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வப் பட்​டப்​படிப்​புக்கு (BNYS) 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு www.tnhealth.tn.gov.in மற்​றும் www.tnayushselection.org ஆகிய சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. பின்​னர், மாணவ, மாணவி​களின் கோரிக்​கையை ஏற்​று, விண்​ணப்​பிக்​கும் அவகாசம் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது.

அந்த வகை​யில், 4,200-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். விண்​ணப்​பங்​கள் பரிசீலனை செய்​யும் பணி நடை​பெற்று வரு​கிறது. அடுத்த வாரம் தகு​தி​யான மாணவர்​களின் தரவரிசை பட்​டியலை வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x