Published : 17 Aug 2025 12:33 AM
Last Updated : 17 Aug 2025 12:33 AM

இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம்: விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் கருத்து

வேலூர் விஐடி பல்​கலை.​யில் நேற்று நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில் தமிழக காவலர் பயிற்​சிப் பள்ளி இயக்​குநரும், டிஜிபி-​யு​மான சந்​தீப் ராய் ரத்​தோருக்கு சான்​றிதழை வழங்​கிய உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன். உடன், பல்​கலை வேந்​தர் கோ.​விசுவ​நாதன், துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன், சேகர் விசுவ​நாதன், ஜி.​வி.செல்​வம், அறங்​காவலர் ரமணி பாலசுந்​தரம், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டரெட்​டி, உதவி துணைத் தலை​வர் காதம்​பரி எஸ்​.​விசுவ​நாதன் உள்​ளிட்​டோர். படம்: வி.எம்​.மணி​நாதன்

வேலூர்: இந்​தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்​கி​யம் என்று விஐடி பல்​கலை. வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார்.

வேலூர் விஐடி பல்​கலை.​யின் 40-வது பட்​டமளிப்பு விழா மற்​றும் அப்​துல் கலாம்​-ஜெகதீஷ் சந்​திர​போஸ் மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தலைமை வகித்​தார். உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​று, மாணவ, மாணவி​களுக்​குப் பட்​டங்​களை வழங்​கி​னார்.

விழா​வில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்​டும். மத்​திய அரசு பட்​ஜெட்​டில் 2.5 சதவீதம் மட்​டுமே கல்விக்கு ஒதுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில், தமிழகம் 21 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கி நாட்​டிலேயே முன்​னணி மாநில​மாகத் திகழ்​கிறது.

புதிய கல்விக் கொள்​கை​யில் உயர்​கல்வி மாணவர் சேர்க்​கையை 50 சதவீத​மாக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது உயர்​கல்வி பயில்​வோரின் எண்​ணிக்​கையை 8 கோடி​யாக உயர்த்த வேண்​டும். இதற்கு அதிக உட்​கட்​டமைப்பு மற்​றும் நிதி தேவைப்​படு​கிறது. இந்​தி​யப் பல்​கலை.கள் உலக தர வரிசை​யில் பின்​தங்​கி​யுள்​ளன. விஐடி பல்​கலைக்​கழகம் 500-வது இடத்​துக்​குள் உள்​ளது. முதல் 100 அல்​லது 200 இடங்​களுக்​குள் வரவேண்​டும். 2047-க்​குள் இந்​தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்​கி​யம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் பேசும்​போது, “உல​கமய​மாக்​கல், வெளி​நாட்டு நேரடி முதலீடு, தொழில்​நுட்ப வளர்ச்சிஉள்​ளிட்​ட​வற்​றால் வேலை​வாய்ப்பு மற்​றும் உயர்​கல்வி வாய்ப்​பு​கள் பன்​மடங்கு உயர்ந்​துள்​ளன. மாணவர்​கள் தொடர்ந்து படித்​துக் கொண்டே இருக்க வேண்​டும். புத்​தகங்​கள்​தான் அறிவைப் பெருக்க உதவு​கின்​றன. மாணவர்​கள் ஒழுக்​க​மான நடத்தை மற்​றும் செயல்​கள் மூலம் நற்​பெயரைப் பெற வேண்​டும்” என்​றார்.

விழா​வில், டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் பேரிடர் மேலாண்​மைத்துறை​யில் முனை​வர் பட்​டம் பெற்​றார். விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன், சேகர் விசுவ​நாதன், ஜி.​வி.செல்​வம், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டரெட்​டி,உதவி துணைத் தலை​வர் காதம்​பரி ச.விசுவ​நாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்​தரம், துணைவேந்​தர் காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக், பதி​வாளர் ஜெய​பாரதி உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x