Published : 16 Aug 2025 06:01 AM
Last Updated : 16 Aug 2025 06:01 AM

பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான துணைக் கலந்​தாய்வு ஓரிருநாட்​கள் தள்​ளிப்​போக வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 423 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலைப் படிப்​பு​களுக்கு ஒரு லட்​சத்து 87,227 அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் உள்​ளன.

இவற்றை நிரப்​புவதற்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. சிறப்​புப் பிரிவு மற்​றும் பொதுப் பிரிவுக்​கான கலந்​தாய்​வில் 1.48 லட்​சம் இடங்​கள் நிரம்​பி​யுள்​ளன. எஞ்​சி​யுள்ள சுமார் 40 ஆயிரம் இடங்​களை நிரப்​புவதற்​கான துணைக் கலந்​தாய்வு ஆகஸ்ட் 21-ல் நடை​பெறும் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு முடிந்​து​விட்ட நிலை​யில் துணைக் கலந்​தாய்​வில் பங்​கேற்க 15 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். தற்​போது மாணவர்​களின் சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அடுத்​த​தாக தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு, கலந்​தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது.

ஆனால், சான்​றிதழ் சரி​பார்ப்பு பணி​கள் முடிவ​தில் கால​தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால் துணைக் கலந்​தாய்வு ஓரிரு நாட்​கள் தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக​வும், இந்​தாண்டு சுமார் 25 ஆயிரம் இடங்​கள் காலி​யாகக்​கூடும் எனவும் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x