Published : 13 Aug 2025 04:55 AM
Last Updated : 13 Aug 2025 04:55 AM
சென்னை: பிஎட் மாணவர் சேர்க்கையில் இணையவழியில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை இன்று (புதன்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பி.எட். மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎட் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்தஆண்டு முதல்முறையாக இணையவழி கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் உள்ள 2,040 இடங்களுக்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களுக்கான விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) ஆன்லைனில் வழங்கப்படும்.
மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆகஸ்ட் 14 முதல் 19-ம் தேதி வரை சேர்ந்துகொள்ளலாம். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளிலும் முதல் ஆண்டு பிஎட் வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT