Published : 05 Aug 2025 12:50 AM
Last Updated : 05 Aug 2025 12:50 AM

இந்த ஆண்டு முதல்முறையாக பிஎட் சேர்க்கைக்கு இணைய வழியில் கலந்தாய்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை: பி.எட். மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு இந்த ஆண்டு முதல்​முறை​யாக இணைய வழி​யில் நடத்​தப்​படு​கிறது.

இதுதொடர்​பாக உயர்​கல்​வித்துறை அமைச்​சர் கோவி. செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஆண்​டு​களில் பி.எட். மாணவர் சேர்க்​கைக்கான கலந்​தாய்வு நேரடி​யாக நடத்​தப்​பட்டு வந்​தது. இதனால், வெளியூர் மாணவர்​கள் சென்​னைக்கு வந்​துசெல்​லும் நிலை இருந்​தது.

இந்த நிலை​யில், வெளியூர் மாணவர்​களின் சிரமத்தை போக்​கும் வகை​யில், முதல்​வர் அறிவுறுத்​தலின்​படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்​கைக்​கான கலந்​தாய்வை இணைய வழி​யில் நடத்தமுடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி, ஆகஸ்ட் 4-ம் தேதி (நேற்​று) முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழி​யில் கலந்​தாய்வு நடை​பெறும்.

பி.எட். படிப்​புக்கு விண்​ணப்​பித்த மாணவர்​கள் www.lwiase.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக கலந்​தாய்​வில் பங்​கேற்​று, தங்​களுக்கு விருப்​ப​மான கல்​லூரியைதேர்வு செய்​ய​லாம். தமிழகத்​தில் உள்ள அரசு மற்​றும் அரசு உதவிபெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் 2,040 இடங்​கள் உள்​ளன. மொத்​தம் 3,545 பேர் கலந்​தாய்​வில்​ பங்​கேற்​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x