Published : 05 Aug 2025 12:47 AM
Last Updated : 05 Aug 2025 12:47 AM

ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு

கோப்புப் படம்

சென்னை: தமிழக அரசின் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை இயக்​குநர் விஷ்ணு சந்​திரன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை​யின்​கீழ் 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் (ஐடிஐ), 311 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்​கைக்​கான காலஅவ​காசம் ஜூலை 31 வரை வழங்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர்​களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.

தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் சேரும் மாணவர்​களுக்கு பயிற்​சிக் கட்​ட​ணம் இல்​லை. கல்வி உதவித்​தொகை​யாக மாதம் ரூ.750 வழங்​கப்​படும். தமிழக அரசு வழங்​கும் விலை​யில்லா சைக்​கிள், சீருடை, ஷூ, பயிற்​சிக் கருவி​கள் மற்​றும் பஸ் பாஸ் வழங்​கப்​படும். இந்த அரிய வாய்ப்பை பயன்​படுத்தி தாங்​கள் விரும்​பும் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களுக்கு கல்​விச் சான்​றிதழ்​களு​டன் நேரில் சென்று விரும்​பும் தொழிற்​பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்​ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்​பாக ஏதேனும் சந்​தேகம் ஏற்​பட்​டால் 9499055642, 9499055618 ஆகிய செல்​போன்​ எண்​களில்​ தொடர்​பு​கொள்​ள லாம்​.இவ்​​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x