Published : 04 Aug 2025 01:12 AM
Last Updated : 04 Aug 2025 01:12 AM

அண்ணா பல்கலை.யில் பொறியியல் வகுப்புகள்: ஆக. 11-ல் தொடக்கம்

சென்னை: பொறி​யியல் மாணவர்​களுக்​கான முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்​கும் என்று அண்ணா பல்​கலைக் கழகம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலைப் படிப்​பு​களுக்கு 3-ம்​ சுற்று கலந்​தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 20-ம் தேதி வரை நடத்​தப்பட உள்​ளது. அத்​துடன் பொறி​யியல் சேர்க்கை கலந்​தாய்வு முடிவடைகிறது.

இந்​நிலை​யில் பல்​கலை.​யின் 4 வளாக கல்​லூரி​களில் முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11-ல் தொடங்கி டிசம்​பர் 10-ம் தேதி வரை நடத்​தப்​படும். அதற்​கு​முன் மாணவர்​களுக்​கான அறி​முக வகுப்​பு​கள் ஆகஸ்ட் 5 முதல் 9-ம் தேதி வரை நடை​பெறும்.

இதே​போல், பல்​கலை. இணைப்பு அங்​கீ​காரம் இதர கல்​லூரி​களில் முதலா​மாண்டு வகுப்​பு​கள் ஆகஸ்ட் 18 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை​யும், இவர்​களுக்​கான அறி​முக வகுப்​பு​கள் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை நடத்​தப்​படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x