Published : 30 Jul 2025 06:55 AM
Last Updated : 30 Jul 2025 06:55 AM

19 துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: அரசு கல்​லூரி​களில் உள்ள பிஎஸ்சி நர்​சிங், பி.​பார்ம் உள்​ளிட்ட 19 துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு ஆன்​லைனில் இன்று தொடங்​கு​கிறது.

தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங், பி.​பார்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்​திறன், பேச்சு மற்​றும் மொழி, நோய் குறி​யியல் உள்​ளிட்ட 19 வகை​யான துணை மருத்​து​வப் படிப்​பு​கள் உள்​ளன. அரசு மருத்​துவ கல்​லூரி​களில் 3,256 இடங்​களும், தனி​யார் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 20,026 இடங்​களும் உள்​ளன.

அரசு கல்​லூரி​களில் உள்ள துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான இடங்​களுக்கு சிறப்பு பிரிவு மற்​றும் பொது கலந்​தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் ஜூலை 30-ம் தேதி (இன்​று) காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. ஆக. 2 மாலை 5 மணி வரை ஆன்​லைனில் பதிவு செய்​து, கட்​ட​ணம் செலுத்​தி, இடங்​களைத் தேர்வு செய்​ய​லாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x