Published : 28 Jul 2025 05:54 AM
Last Updated : 28 Jul 2025 05:54 AM

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான என்​எம்​எம்​எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிய உத்தரவு

சென்னை: என்​எம்​எம்​எஸ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் விண்​ணப்​பங்​களை இணை​யதளத்​தில் துரித​மாக பதிவுசெய்ய வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பப்பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: கல்வி உதவி தொகைக்கான என்​எம்​எம்​எஸ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் புதிய படிவங்​கள் மற்​றும் ஏற்​கெ​னவே உதவித்​தொகை பெற்று வருபவர்​களின் புதுப்​பித்​தல் விண்​ணப்​பங்​களை முறை​யாக பதிவு செய்ய வேண்​டும் என்று பல்​வேறு அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்த பணி​களை ஜூலை 15-ம் தேதிக்​குள் முடித்​திட​வும் உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், இதில் 40% பணி​கள் மட்​டுமே முடிவடைந்​துள்​ளது. இந்த பணி​களை முடிக்​கா​விட்​டால் சம்​பந்​தப்​பட்ட பிரிவு எழுத்​தர், கண்​காணிப்​பாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்​டும். எனவே, என்​எம்​எம்​எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் புதிய மற்​றும் புதுப்​பித்​தல் விண்​ணப்​பங்​களை துரித​மாக பதிவுசெய்ய வேண்​டும்.

இல்​லை​யெனில், சம்​பந்​தப்​பட்ட மாவட்​டங்​களில் பணி புரி​யும் பிரிவு எழுத்​தர்​கள் இயக்​குநரகத்​துக்கு நேரில் வந்து விளக்​கம் அளிக்க வேண்​டும். தொடர்ந்து இந்த பணி​களை முடித்த பின்​னரே அவர்​கள் இங்​கிருந்து விடுவிக்​கப்​படு​வார்​கள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x