Published : 24 Jul 2025 01:17 AM
Last Updated : 24 Jul 2025 01:17 AM
சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய நகல்களுடன் ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை -600106’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் என்று இந்திய மருத்துவம், ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT