Last Updated : 15 Jul, 2025 09:01 PM

1  

Published : 15 Jul 2025 09:01 PM
Last Updated : 15 Jul 2025 09:01 PM

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்புக்கான சேர்க்கை - ஆக.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில் சேருவதற்கு விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதரபிரிவினர் ரூ.1000-ம் செலுத்த வேண்டும். இதுதவிர கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கு மொத்தம் 260 இடங்கள் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x