Published : 12 Jul 2025 05:37 AM
Last Updated : 12 Jul 2025 05:37 AM

டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது: 4 ஆயிரம் காலியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

சென்னை: தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் காலி​யாக​வுள்ள 3,935 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக டிஎன்​பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று (சனிக்​கிழமை) காலை நடை​பெறுகிறது. இத்​தேர்வை தமிழகம் முழு​வதும் 13 லட்​சத்து 89,738 பேர் எழுதுகின்​றனர். அவர்​களில் 8 லட்​சத்து 63,068 பேர் பெண்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அரசின் பல்​வேறு துறை​களில் இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்டச்​சர் மற்​றும் கிராம நிர்​வாக அலு​வலர், வனக்​காப்​பாளர், தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரிய உதவி​யாளர் உள்​ளிட்ட பதவி​களில் 3,935 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குருப்-4 தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி ஏப்​ரல் 25-ம் தேதி வெளி​யிட்​டது. அதற்​கான விண்​ணப்​பங்​கள் ஆன்​லைனில் மே மாதம் 24-ம் தேதி வரை பெற்​றுக்​கொள்​ளப்​பட்​டன.

கல்வித் தகுதி 10-ம் வகுப்பு: குருப்-4 தேர்​வுக்​கான அடிப்​படை கல்​வித்​தகுதி 10-ம் வகுப்பு என்ற போதி​லும் இத்​தேர்​வுக்கு பட்​ட​தா​ரி​கள், முதுகலை பட்​ட​தா​ரி​கள் பொறி​யியல் பட்​ட​தா​ரி​கள் என உயர் கல்வித்​தகுதி உடையவர்​களே அதிக எண்ணிக்​கை​யில் விண்ணப்​பித்​தனர். தேர்​வுக்கு 13 லட்​சத்து 89, 743 பேர் விண்​ணப்​பித்​திருந்த நிலை​யில், அதில் தகு​தி​யில்​லாத 5 பேரின் விண்​ணப்​பங்​கள் மட்​டும் நிராகரிக்​கப்​பட்​டன.

5 லட்​சத்து 26,553 ஆண்​கள், 8 லட்​சத்து 63,068 பெண்​கள் 117 மூன்​றாம் பாலினத்​தவர் என 13 லட்​சத்து 89,738 பேர் தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு கடந்த வாரம் ஆன்​லைனில் ஹால்​டிக்​கெட்​கள் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டன. இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டபடி, குருப்-4 தேர்வு இன்று (ஜூலை 12) 3,034 மையங்​களில் நடை​பெற உள்​ளது. சென்னை 311 தேர்​வுக் கூடங்​களில் 98,848 பேர் எழுதுகின்​றனர். குருப்-4 தேர்​வுக்​கான அனைத்து ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ள​தாக டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதி​யம் 12.30 மணிக்கு முடிவடை​யும். தேர்​வர்​கள் தேர்வு தொடங்​கு​வதற்கு ஒரு மணி நேரத்​துக்கு முன்​பாக தேர்வு மையத்​துக்கு செல்​லு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர். தேர்​வில் பொதுத்​தமிழ் பாடத்​தில் இருந்து 100 கேள்வி​கள், பொது அறி​வு, அடிப்​படை கணிதம் ஆகிய​வற்​றில் 100 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் அப்​ஜெக்​டிவ் முறை​யில் கேட்​கப்​படும். 3 மணி நேரத்​துக்​குள் விடையளிக்க வேண்​டும். ஒரு கேள்விக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் மொத்​தம் 300 மதிப்​பெண்.

காலியிடம் அதிகரிக்கும்: குருப்-4 தேர்​வுக்கு நேர்​காணல் கிடை​யாது. எனவே, எழுத்​துத்​தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்​றாலே அரசு பணி வாய்ப்பு உறுதி என்​பது குறிப்​பிடத்​தக்​கது. தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள காலி​யிடங்​கள் 3,935 என்ற போ​தி​லும் காலி​யிடங்​களின் எண்​ணிக்கை 10 ஆயிரம் அளவுக்கு அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x