Published : 12 Jul 2025 12:39 AM
Last Updated : 12 Jul 2025 12:39 AM

தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு டிஇஓ-ஆக பதவி உயர்வு

கோப்புப் படம்

சென்னை: ​மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் கண்​ணப்​பன் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டில் பள்​ளிக்கல்​வித் துறை​யில் வரும் மாவட்ட கல்வி அலு​வலர் பதவி​யில் மொத்​தம் 60 காலிபணி​யிடங்​கள் உள்​ளன. பதவி உயர்​வு, பணி​யிட மாறு​தல் மூலம் அவற்றை நிரப்ப தகு​தி​யான தலைமை ஆசிரியர்​கள் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டது. அதில் 2 பேர் பணி ஓய்வு பெற்​றனர். எஞ்​சிய 34 தலைமை ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு தரப்​பட்​டுள்​ளது. இதே​போல, 24 மாவட்டகல்வி அலு​வலர்களுக்கு பணி​யிட மாறு​தல் வழங்​கப்​பட்​டுள்​ளது. சம்​பந்​தப்​பட்ட மாவட்ட கல்வி அலு​வலர்​கள் உரிய வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி புதிய பொறுப்​பு​களை ஏற்க வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x