Published : 07 Jul 2025 12:49 AM
Last Updated : 07 Jul 2025 12:49 AM

மாநிலம் முழுவதும் ஆக.1 முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

சென்னை: தமிழகத்​தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்​தைகளை கணக்​கெடுக்​கும் களப்​பணிமாநிலம் முழு​வதும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்​கு​கிறது.

இதுகுறித்து ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி மாநிலத் திட்ட இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்​தில் 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான பள்ளி செல்​லாத குழந்​தைகள், இடைநின்ற குழந்​தைகளை அடை​யாளம் காண்​ப​தற்​கான கணக்​கெடுப்பு பணி​கள் ஆகஸ்ட் 1-ல் தொடங்​க​வுள்​ளது.

இந்த கணக்​கெடுப்பு பணி​யில் மண்டல மேற்​பார்​வை​யாளர்​கள், ஆசிரியர் பயிற்​றுநர்​கள், கல்வி மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​கள், பள்ளி தலை​மை​யாசிரியர்​கள், பள்ளி ஆசிரியர்​கள், சிறப்பு பயிற்​றுநர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், இல்​லம் தேடிக் கல்​வித் திட்ட தன்​னார்​வலர்​கள் உள்​ளிட்​டோர் ஈடுபட உள்​ளனர். இந்த களப்​பணி​யின்​போது பள்ளி செல்​லாத குழந்​தைகளை கண்​டறிந்து அதற்​கான காரணம் பதிவு செய்​யப்பட வேண்​டும். அதன்​பின் அவர்​களை அருகே உள்ள அரசு மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் சேர்க்​க​வும், இது​சார்ந்து பெற்​றோர்​களுக்கு உளவியல் ஆலோ​சனை வழங்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுத​விர இந்​தக் களப்​பணி தொடர்​பாக ஒவ்​வொரு கட்​ட​மாக மேற்​கொள்​ள வேண்​டிய செயல்​பாடு​கள், செயலி​யில் பதிவேற்​றம் செய்​தல், மாணவர்​களின் வரு​கைப்​ப​திவு குறித்து ஆய்வு செய்​தல் உள்ளிட்ட வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றைப் பின்​பற்றவேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x