Published : 07 Jul 2025 12:33 AM
Last Updated : 07 Jul 2025 12:33 AM

கல்வி கட்டணம் செலுத்துமாறு ஏழை குழந்தைகளை கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள்

சென்னை: இலவச கட்​டாய கல்வி திட்​டத்​தில் சேர்க்கை பெற்ற ஏழை குழந்​தைகளை கல்வி கட்​ட​ணம் செலுத்​து​மாறு பல தனி​யார் பள்​ளி​கள் கட்​டாயப்​படுத்​து​வ​தாக புகார் எழுந்​துள்​ளது.

இலவச கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் ஏழை குழந்​தைகளுக்கு 25 சதவீத இடங்​கள் வழங்​கப்​படும். அந்த வகை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களில் சுமார் 1.10 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது 1-ம் வகுப்​பில் சேரும் குழந்​தைகள் 8-ம் வகுப்பு வரை இலவச​மாக படிக்​கலாம். அவர்​களுக்​கான கட்​ட​ணத்தை மத்​திய, மாநில அரசுகள் இணைந்து தனி​யார் பள்​ளி​களுக்கு வழங்​கும். தமிழகத்​தில் கடந்த 2013-ல் அமல்​படுத்​தப்​பட்ட ஆர்​டிஇ திட்​டத்​தின்​கீழ் இது​வரை சுமார் 4 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் சேர்ந்து படித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, புதிய தேசிய கல்விக் கொள்​கையை தமிழகம் ஏற்க மறுப்​ப​தால், பள்​ளிக்​கல்வி திட்​டங்​களுக்​கான நிதியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது. இதுத​விர, முந்​தைய கல்வி ஆண்​டு​களுக்​கான நிலுவை என மத்​திய அரசு சுமார் ரூ.600 கோடி நிதி வழங்க வேண்டி உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதன் காரண​மாக, நடப்பு (2025-26) கல்வி ஆண்​டில் தனி​யார் பள்​ளி​களில் இலவச சேர்க்​கையை தொடங்க தமிழக அரசு ஒப்​புதல் வழங்​க​வில்​லை.

இது தொடர்​பான வழக்​கில், கல்வி உரிமை சட்​டத்​தின்​படி குறிப்​பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு மத்​திய அரசு வழங்க வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், மத்​திய அரசு இது​வரை தனது பங்கு நிதியை ஒதுக்​க​வில்​லை. மாநில அரசும் தனி​யார் பள்​ளி​களுக்கு 2 ஆண்​டு​களுக்​கான நிதியை விடுவிக்​க​வில்​லை. இதனால், தற்​போது ஆர்​டிஇ திட்​டத்​தில் படித்து வரும் மாணவர்​களை கல்வி கட்​ட​ணம் செலுத்​து​மாறு பல தனி​யார் பள்​ளி​கள் கட்​டாயப்​படுத்​து​வ​தாக புகார் எழுந்​துள்​ளது.

இதுகுறித்து சமூக ஆர்​வலர் நமச்​சி​வா​யம் கூறிய​தாவது: ஆர்​டிஇ திட்​டத்​தில் கடந்த 2 ஆண்​டு​களாக நிதி வழங்​கப்​ப​டாத​தால், கட்​ட​ணத்தை செலுத்​து​மாறு மாணவர்​களுக்கு பள்ளி நிர்​வாகங்​கள் அழுத்​தம் தரு​கின்​றன. பெரும்​பாலான பெற்​றோர் வேறு வழி​யின்றி முன்​பண​மாக குறிப்​பிட்ட தொகையை செலுத்​தி​விட்​டனர். அரசிடம் இருந்து பணம் வந்தபிறகு, அந்த தொகையை திருப்பி தரு​வ​தாக பள்ளி நிர்​வாகங்​கள் கூறி​யுள்​ளன. இதனால், ஏழை மாணவர்​களின் பெற்​றோர் பா​திக்​கப்​படு​வார்​கள். எனவே, தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x