Published : 02 Jul 2025 05:04 AM
Last Updated : 02 Jul 2025 05:04 AM

100 நாள் சவாலை நிறைவேற்றிய 4,552 அரசு பள்ளிகளுக்கு பாராட்டு: தலைமை ஆசிரியர்களுக்கு திருச்சியில் விழா

சென்னை: பள்​ளிக் கல்​வித் துறை​யின் 100 நாள் சவாலை ஏற்று மாணவர்​களின் வாசித்​தல், கணிதத்​திறனில் முன்​னேற்​றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​களுக்கு சிறப்பு விருதுகள் வழங்​கப்பட உள்​ளன. தமிழகத்​தில் அரசு, அரசு உதவி​பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்​கும் மாணவர்​களின் தமிழ், ஆங்​கிலம் வாசிப்பு மற்​றும் கற்​றல் திறன் அடைவு​கள் குறித்து 100 நாள் சவாலை பள்​ளிக் கல்​வித் துறை அறி​வித்​தது.

இதற்​காக முதல்​கட்​ட​மாக 4,552 பள்​ளி​கள் கடந்த நவம்​பர் மாதம் அழைப்பு விடுத்​தன. இந்த பள்​ளி​கள் 100 நாள் சவால் என்ற அடிப்​படை​யில் தமிழ், ஆங்​கிலம் வாசித்​தல் பயிற்சி மற்​றும் கணிதப் பாடத்​தில் கூட்​டல், கழித்​தல், பெருக்​கல், வகுத்​தல் ஆகிய அடிப்​படைத் திறன்​களை கற்​பித்​து, பொது​வெளி​யில் சவாலை நடை​முறைப்​படுத்​தின.

அப்​போது தமிழ், ஆங்​கில எழுத்​துகளை அடை​யாளம் காணுதல், வார்த்​தைகளை பிழை​யின்றி வாசித்​தல், கணிதத்​தில் ஒற்​றை, இரட்டை எண்​களை கண்​டு​பிடித்​தல், கூட்​டல், வகுத்​தல் போன்​றவை ஆய்​வில் மேற்​கொள்​ளப்​பட்​டது. ஒரு வகுப்​புக்கு 5 மாணவர்​கள் வீதம் இந்த கற்​றல் அடைவுத் திறன் சோதிக்​கப்​பட்​டது.

இந்த ஆய்​வுக்கு 1 முதல் 3 வகுப்​பு​களில் இருந்து 45,032 மாணவர்​கள், 4, 5-ம் வகுப்​பு​களில் இருந்து 35,866 மாணவர்​கள் என மொத்​தம் 80,898 பேர் சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டனர். இந்​நிலை​யில் முதல் சுற்​றில் சிறப்​பான நிலையை அடைய முயற்​சிகள் மேற்​கொண்ட பள்​ளி​களுக்கு பாராட்டு விழா ஜூலை 6-ம் தேதி திருச்சி தேசிய சட்​டக் கல்​லூரி வளாகத்​தில் மதி​யம் 3 மணிக்கு நடை​பெறவுள்​ளது.

இதில் 4,552 பள்​ளி​களி​லிருந்து தலைமை ஆசிரியர்​கள் பங்​கேற்​பர். அவர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பாராட்​டுச் சான்​றிதழ்​களை வழங்கி கவுரவிக்​க​வுள்​ள​தாக தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில்​ தெரிவிக்கப்பட்​டுளளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x