Published : 01 Jul 2025 06:15 AM
Last Updated : 01 Jul 2025 06:15 AM

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பம்

சென்னை மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. முதல் நாளில் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆட்டம்பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற பேராசிரியர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள். |படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தமிழகம் முழு​வதும் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு நேற்று வகுப்பு தொடங்கியது. மாநில கல்​லூரி உள்பட பல கல்​லூரி​களில் சிவப்பு கம்பள விரிப்​புடன் மேளதாளம் முழங்க மாணவர்​களுக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் சேரு​ம், முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு, ஜூன் 30-ம் தேதி வகுப்பு தொடங்​கும் என கல்​லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்லி அறி​வித்​திருந்​தார். அதன்​படி, தமிழகம் முழு​வதும் அரசு கல்​லூரி​களில் முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு வகுப்​பு​கள் நேற்று தொடங்​கின.

கல்​லூரி​யில் முதன்​முதலாக அடி​யெடுத்து வைத்து மாணவ-​மாணவி​களை சீனியர் மாணவர்​களும், பேராசிரியர்​களும் அன்​போடு வரவேற்று வகுப்​பறைக்கு அழைத்​துச் சென்​றனர். சென்​னை​யில் மாநில கல்​லூரி உள்பட பல கல்​லூரி​களில் மாணவர்​களுக்கு மேள​தாளம் முழங்க உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

மாநில கல்​லூரி​யில் முதல்​வர் ராமன் தலை​மை​யில் மாணவர்​களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்​கப்​பட்​டது. என்​எஸ்​எஸ் மாணவர்​கள் கரகாட்​டம் ஆடி​யும், பறையடித்​தும் முதலாம் ஆண்டு மாணவர்​களை​யும் பெற்​றோரை​யும் வரவேற்​றனர். சீனியர் மாணவர்​கள் பூங்​கொத்து கொடுத்து வரவேற்பு அளித்​தனர்.

இதுதொடர்​பாக கல்​லூரி​யின் முதல்​வர் ஆர்​.​ராமன் கூறும்​போது, "முதலாம் ஆண்டு மாணவர்​களுக்கு ஒரு வார காலம் படிப்பு அல்​லாமல், பொது​வான விஷ​யங்​கள் குறித்து கற்​பிக்​கப்​படும். மனித உரிமை​கள், மதிப்​பீடு​கள், உளவியல், எதிர்​கால இலக்​கு, உயர்​கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பு​கள், அதற்​கான போட்​டித் ​தேர்​வுகள் போன்​றவை குறித்து நிபுணர்​கள் கருத்​துரை வழங்​கு​வர். அவர்​களு​டன் மாணவர்​கள் கலந்​துரை​யாடலாம்.

மேலும், பல்​கலைக்​கழகத் தேர்​வு​கள், செமஸ்​டர் முறை குறித்​தும் சொல்​லித்​ தரப்​படும். முதல் நாளில் மாநிலங்​களவை உறுப்​பினர் வில்​சன், வழக்​கறிஞர் அருள்​மொழி ஆகியோர் மனித உரிமை​கள் குறித்து மாணவர்​களிடையே உரை​யாற்​றினர்" என்​றார்.

இதற்​கிடையே, முதலாம் ஆண்டு மாணவர்​களுக்​கான ஒரு​வார கால அறி​முக பயிற்​சித் திட்​டத்தை சென்னை ராணி மேரி கல்​லூரி​யில் உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர் தொடங்​கி ​வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் கல்​லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்​லி, ராணி மேரி கல்​லூரி​யின் முதல்​வர்​ உமா மகேஸ்​வரி மற்​றும்​ பேராசிரியைகள்​ கலந்​துக்​கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x