Published : 01 Jul 2025 04:58 AM
Last Updated : 01 Jul 2025 04:58 AM

மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு நாளும் 3 வேளை ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும். அமைந்தகரையில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நேற்று ‘வாட்டர் பெல்’ அடித்ததும் தண்ணீர் அருந்திய மாணவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ​மாணவர்​கள் தண்​ணீர் பருகுவதை ஊக்​குவிக்​கும் வகை​யில் பள்​ளி​களில் ‘வாட்​டர் பெல்’ திட்​டம் நேற்று அமல்​படுத் தப்பட்​டது. மாணவர்​களின் உடல்​நலனை காக்க தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை பல்​வேறு முன்​னெடுப்​பு​களை மேற்​கொண்டு வருகிறது. வகுப்பு நேரத்​தில் மாணவர்​கள் தண்​ணீர் பரு​காமல் இருப்​ப​தால் பல்​வேறு உடல் உபாதைகள் ஏற்​படு​கின்​றன.

அதை தடுக்​கும் வகை​யில் மாணவர்​கள் தண்​ணீர் பரு​கு​வதை ஊக்​குவிக்க, ‘வாட்​டர் பெல்’ எனும் புதிய திட்​டத்தை தற்​போது செயல்​பாட்​டுக்கு கொண்டு வந்​திருக்​கிறது. இந்த திட்​டம் அனைத்து பள்​ளி​களி​லும் நேற்று முதல் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

மாணவர்​கள் தண்​ணீர் பருக ஏது​வாக காலை 11 மணிக்​கும், பகல் 1 மணிக்​கும் மற்​றும் மாலை 3 மணிக்​கும் வாட்​டர் பெல் அடிக்​கப்​பட்​டது. பெல் அடித்​ததும் தண்​ணீர் பரு​கு​வதற்​காக 2 நிமிடங்​கள் இடைவெளி அளிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்துமாணவர்​கள் வாட்டர் பாட்​டில்​களில் இருந்து தண்​ணீர் பரு​கினர். மாணவர்​கள் தண்​ணீர் பரு​கு​வதை தலைமை ஆசிரியர்​கள் கண்​காணித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x