Published : 30 Jun 2025 05:34 AM
Last Updated : 30 Jun 2025 05:34 AM

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத் துறை அறிவிப்பு

கோப்புப் படம்

சென்னை: பிளஸ் 1 மறுகூட்​டல், மறும​திப்​பீடு முடிவு​கள் இன்று (ஜூன் 30) வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்பு விவரம்: தமிழகத்​தில் பிளஸ் 1 வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடை​பெற்​றது. இந்த தேர்வு எழு​தி​ய​வர்​களில் மறுகூட்​டல், மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​களின் பதிவெண் பட்​டியல் இன்​று (ஜூன் 30) மதி​யம் வெளி​யிடப்​படு​கிறது. அதன்​ விவரங்​களை மாணவர்​கள் தேர்​வுத்​ துறை​யின் www.dge.tn.gov.in எனும் இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

இந்த பட்​டியலில் இடம்​பெறாதவர்​களின் விடைத்​தாள்​களில் எவ்​வித மாற்​ற​மும் இல்லை என்​பது தெரிவிக்​கப்​படு​கிறது. மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​கள் மட்​டுமே மேற்​கண்ட தேர்​வுத்​துறை இணை​யதளத்​தில் இருந்து தங்​களுக்​கான திருத்​தப்​பட்ட மதிப்​பெண் பட்​டியலை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். மேலும், அசல் மதிப்​பெண் சான்​றிதழ் வழங்​கப்​படும் தேதி விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x