Published : 30 Jun 2025 12:23 AM
Last Updated : 30 Jun 2025 12:23 AM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு​கள் இன்று (ஜூன் 30) முதல் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்​தில் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் நடப்​பாண்டு மாணவர் சேர்க்​கைக்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த மே 7 முதல் 27-ம் தேதி வரை நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​தனர்​.​முதல்​கட்​ட​மாக சிறப்​புப் பிரிவுக்​கான கலந்​தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்​கான கலந்​தாய்வும் நிறைவடைந்​தது.

இதையடுத்து, அரசுக் கல்​லூரி​களில் முதல்​கட்ட கலந்​தாய்​வின்​போது நிரம்​பாத இடங்​களை நிரப்​புவதற்​கான 2-ம்​கட்ட சேர்க்​கைப் பணி​கள் தற்​போது தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இதற்​கிடையே கலை, அறி​வியல் படிப்​பு​களில் சேர்ந்த முதலா​மாண்டு மாணவர்​களுக்கு ஜூன் 30-ம் தேதி வகுப்​பு​கள் தொடங்​கப்​படும் என்று கல்​லூரிக்​கல்வி இயக்​குநரகம் அறி​வித்​திருந்​தது.

அதன்​படி முதலா​மாண்டு மாணவர்​களுக்​கான வகுப்​பு​கள் இன்​று(ஜூன் 30) தொடங்​கப்பட உள்​ளன. இதையடுத்து மாணவர்​களை வரவேற்க அரசுக் கல்​லூரி​களில் சிறப்பு நிகழ்ச்​சிகள் ஏற்​பாடு​ செய்​யப்​பட்​டு உள்​ளன. மேலும், ராகிங் போன்ற சம்​பவங்​கள் நடை​பெறாத​வாறு கல்​லூரி வளாகங்​களில் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் துறை அதி​காரி​கள் தகவல் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x