Published : 29 Jun 2025 12:41 AM
Last Updated : 29 Jun 2025 12:41 AM
பொறியியல் டிப்ளமோ படிப்புக்கான சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொறியியல் டிப்ளமோ இறுதி செமஸ்டர் தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு ஜூன் 30 முதல் ஜூலை 16 வரையும், செய்முறைத் தேர்வு ஜூலை 17 முதல் 25 வரையும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் https://dipexamstndte.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சிறப்பு துணை தேர்வின் முடிவுகள் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT