Published : 19 Jun 2025 05:47 AM
Last Updated : 19 Jun 2025 05:47 AM

பிளஸ் 2 துணை தேர்​வு: இன்று ஹால் டிக்​கெட்

கோப்புப் படம்

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 19) மதியம் வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோல, செய்முறை தேர்வுக்கான தேதி விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x