Published : 17 Jun 2025 06:14 AM
Last Updated : 17 Jun 2025 06:14 AM

சென்னை ஐஐடியில் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து மெஷின் லேர்னிங் ஆன்லைன் சான்றிதழ் படிப்பு

சென்னை: சென்​னை, ஐஐடி பிர​வார்​டக் டெக்​னாலஜீஸ் ஃபவுண்​டேஷன், டிசிஎஸ் அயன் நிறு​வனத்​துடன் இணைந்​து, மெஷின் லேர்னிங் ஆப​ரேஷன்ஸ் என்ற ஆன்​லைன் சான்​றிதழ் படிப்பை (எம்​எல் ஆப்​ஸ்) அறி​முகப்​படுத்தி இருக்​கிறது.

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), மெஷின் லேர்​னிங் (எம்​எல்) துறை​யில் உரு​வாகும் எதிர்​கால வேலை​வாய்ப்​பு​களுக்கு தகு​தி​யான நபர்​களை உரு​வாக்​கும் நோக்​கில் இந்த படிப்பு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த ஆன்​லைன் படிப்​பானது மொத்​தம் 110 மணி நேரம் கொண்​டது.

இப்​படிப்பை வெற்​றிகர​மாக முடிக்​கும் பட்​ட​தா​ரி​களுக்கு ஏஐ, எம்​எல், டேட்டா சயின்ஸ் எல்​எல்​எம் (லார்ஜ் லேங்​கு​வேஜ் மாடல்) துறை​யில் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் காத்​திருக்​கின்​றன. அவர்​கள் டேட்டா இன்​ஜினீயர், மெஷின் லேர்​னிங் ஆப​ரேஷன்ஸ் இன்​ஜினீயர், எம்​எல் ஆப்ஸ் பிளாட்​பார்ம் இன்​ஜினீயர், எம்​எல் ஆட்​டோமேஷன் இன்​ஜினீயர் உள்​ளிட்ட பல்​வேறு பதவி​களில் சேரலாம்.

இந்த ஆன்​லைன் படிப்​பில் சேர ஆர்​வ​முடைய​வர்​கள் https://www.tcsion.com/hub/iitm-pravartak/ என்ற இணை​யதளம் மூலம், ஜூலை 5-ம் தேதிக்​குள் பதிவு செய்து கொள்ள வேண்​டும். இதற்​கான ஆன்​லைன் பயிற்சி வகுப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்​கும் என்​று, சென்னை ஐஐடி பிர​வார்​டக் டெக்​னாலஜீஸ் ஃபவுண்​டேஷன் அறி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x