Published : 13 Jun 2025 06:27 AM
Last Updated : 13 Jun 2025 06:27 AM

உதவி தொகையுடன் கூடிய எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 4 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை தரமணியில் இயங்கிவரும் தமிழக அரசின் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகையுடன் 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, கடைசி நாள் ஜூலை 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இதற்கான விண்ணப்பப்படிவத்தை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல் மற்றும் ஆவணங்களை இணைத்து ஜூலை 4-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்..

மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x