Published : 16 May 2025 04:34 AM
Last Updated : 16 May 2025 04:34 AM
சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றன.
இதில் 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைந்தது.
தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்தது. அதன்படி, தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிடுகிறார். 10-ம் வகுப்புக்கு காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.inhttp://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.
மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT