Published : 13 May 2025 06:04 PM
Last Updated : 13 May 2025 06:04 PM
உயர் கல்வியாக பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா? - பிளஸ் 2 படிக்கும் மற்றும் படித்து முடித்து உயர் கல்வியை தேடும் மாணவர்களை கொண்ட குடும்பங்கள் அனைத்திலும் இந்த பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கும்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்களுக்கு நடத்தப் பட்டு வருகின்றன. அதேசமயம், ஆண்டுதோறும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடுவிழா கண்டு வருகின்றன. மேலும், பல கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகின்றன. இவற்றின் மத்தியில் இஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா என்ற கிலியும் அதிகரித்து வருகிறது. நகைச்சுவை துணுக்குகள் முதல் திரைப்படங்கள் வரை பொறியியல் படிப்புக்கு எதிரான கிண்டல்கள் மற்றும் சீண்டல்களில் நிதர்சனமும் நிறைந்திருக்கிறது.
இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறியது: பொறியியல் படிப்பில் 50-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. ஒரு காலத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாரம்பரியப் பொறியியல் படிப்புகளை எடுத்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், கணினி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் பெருகிய நிலையில், அந்தப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொறியியல் படிப்புக்கான வரவேற்பு மாணவ, மாணவிகளிடம் குறையவில்லை என்பதை ஒவ்வொரு ஆண்டும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆண்டுதோறும் பல லட்சம் பொறியியல் பட்டதாரி கள் வேலை வாய்ப்பு சந்தையில் ஐக்கியமாகிறார்கள். ஏற்கெனவே உரிய வேலையின்றி காத்திருப்போரு டன் அவர்கள் போட்டியிட்டாக வேண்டும்.
நாளுக்கு நாள் நவீனமடைந்து வரும் பொறியியல் துறையில், ஓரிரு ஆண்டுகள் தாமதிப்பதும் பட்டதாரிகளி ன் திறன்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பாகும். வேலை கொடுப்போரை தயங்கச் செய்யும். எனினும், பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் குவியக் காரணம், பொறியியல் என்பது எவர்க்ரீன் துறையாக நீடிப்பதுதான். பொறியியல் படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் என்றுமே மவுசு குறையாது.
அதிலும் இந்தியா போன்ற பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அசுரப் பாய்ச்சல் எடுக்கும் தேசத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை தொடரவே செய்யும். எனவே, பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா என்பதைவிட, எந்த துறையில் படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதைப் பொறுத்தே வேலைவாய்ப்புகள் அமைய வாய்ப்பாகின்றன.
பொறியியல் கல்லூரிக்கான அடிப்படை வசதி ஏதுமற்ற, உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத, தனியார் கல்லூரி ஒன்றில் சேரும் மாணவரு க்கு படிப்பை முடிப்பதே பெரும்பாடாகி விடும். சிறந்த கல்லூரியில் படிப்பை முடித்த பட்டதாரியுடன் அவர்களால் வேலை வாய்ப்பு சந்தையில் மோதுவதும் பெரும் சவாலாகும். இதனால் பெயரளவில் இஞ்ஜினியரிங் பட்டத்தோடு முடங்கவோ, படித்த படிப்புக்கு சற்றும் பொருந்தாத பணியி ல் எதிர்காலத்தை பணயம் வைக்கவோ அவர்கள் தலைப்படுகின்றனர்.
இதர புறக்காரணிகளை விட, உயர் கல்வியில் சேர விரும்பும் மாணவருக்கு, பொறியியல் படிப்பில் இயல்பாகவே நாட்டம் உள்ளதா என்பதும் இங்கே முக்கியமானது. பள்ளிப் படிப்பில், கணக்குப் பாடத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது மட்டுமே, உயர் கல்வியாக பொறியியலை தீர்மானிக்க போதுமானதல்ல. பொறியியலிலும், அதன் குறிப்பிட்ட துறையில் தன்னிச்சையாய் ஆர்வம் கொண்டவர்கள், பொறியியல் உயர்கல்வியில் ஜொலிப்பது இயல்பாக நடந்து விடும்.
எனவே, பொறியியல் படிப்பில் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், சிறந்த கல்லூரி மற்றும் சிறப்பான பாடப்பிரிவு ஆகியவற்றை தெரிவு செய்வதற்கு இணையாக, கல்லூரியில் சேரவிருக்கும் மாணவரின் உள்ளக்கிடக்கை என்ன என்பதையும் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT