Published : 13 May 2025 01:15 PM
Last Updated : 13 May 2025 01:15 PM
புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அறிவித்தது. இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அளவுக்கு அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தைவிட மாணவிகள் 5% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 90% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவிகள் 91.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.70% ஆகும்.
மொத்தம் 16,92,794 பேர் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதியிருந்தனர்.
இந்த ஆண்டு முதல் ஐந்து மண்டலங்களில் வெற்றி பெற்ற பகுதிகளில் விஜயவாடா 99.60% தேர்ச்சி சதவீதத்துடன் முன்னிலை வகித்துள்ளது. இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் 99.32%, சென்னை 97.39%, பெங்களூரு 95.95%, டெல்லி மேற்கு 95.37% மதிப்பெண்களுடன் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT