Last Updated : 12 May, 2025 04:23 PM

 

Published : 12 May 2025 04:23 PM
Last Updated : 12 May 2025 04:23 PM

மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் 2025-27 மாணவர் சேர்க்கை தொடக்கம்

கோப்புப்படம்

சென்னை: மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும்.

மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) சார்பில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மரைன் ஃபிட்டர், வெசல் நேவிகேட்டர் ஆகிய இரு பயிற்சிகள் இந்நிறுவனத்தில் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 2025 ஆக.1-ம் தேதியன்று 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175. சென்னை, ராயபுரத்தில் உள்ள சிப்நெட் நிறுவனத்தில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரூ.1,500 அரசு உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 5-ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவு ஜூலை 14-ம் தேதி வெளிவரும்.

விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப படிவங்களை www.cifnet.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-25953769, 25952691, 90519 08995, 74014 73752, 99520 62628, 97886 71301 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x