Last Updated : 07 May, 2025 06:11 PM

 

Published : 07 May 2025 06:11 PM
Last Updated : 07 May 2025 06:11 PM

பி.ஹெச்டி படிப்புக்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: பாரதியார் பல்கலை அறிவிப்பு

கோவை: பி.ஹெச்டி படிப்புக்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் இன்று (மே 7) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழக துறைகளிலும், கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உள்ள பி.ஹெச்டி பகுதி நேரம் மற்றும் முழு நேரம் ஆராய்ச்சிப் பட்டப்படிப்புக்கு 2025-26-ம் கல்வியாண்டுக்கான பொது நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 6-ம் தேதி நடைபெற உள்ளது.

காலை 11 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு வரும் 9-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் போர்ட்டல் (https://fms.b-u.ac.in/cet) மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x