Published : 05 May 2025 10:03 AM
Last Updated : 05 May 2025 10:03 AM

நீட் தேர்வு ‘சம்பவங்கள்’ - வேலூரில் மையம் மாறி வந்த மாணவிக்கு எஸ்ஐ அவசர உதவி!

வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் ‘நீட்’ தேர்வெழுத வந்த மாணவர்களின் ஆணவங்களை பரிசோதித்த பிறகே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர்/திருவண்ணாமலை: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடை பெற்ற நிலையில் வேலூர், திரு வண்ணாமலையில் 18 தேர்வுக் கூடங்களில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் மொத்தம் 8,574 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 283 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்ட இந்த நுழைவுத் தேர்வுக்கு இந் தாண்டின் தேர்வு மையங்கள் அனைத்தும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன.

அதன்படி, வேலூர் மாவட்டத் தில் மொத்தம் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத 5,737 மாணவ, மாணவி களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று நடைபெற்ற ‘நீட்’ நுழைவுத் தேர்வை 5,554 பேர் எழுதிய நிலையில் 183 பேர் தேர்வுக்கு வரவில்லை.

‘நீட்’ நுழைவுத் தேர்வையொட்டி 12 தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்ற 240 அறைகள், தேர்வு மையங்களின் நுழைவு பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டன. இணைய தளம் மூலமாக முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அனைத்து தேர்வு மையங் களிலும் 5 ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுடன் வந்த பெற்றோர் சுட்டெரிக்கும்
வெயிலில் கல்லூரிக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்தனர்.

சுட்டெரித்த வெயிலில் தவிப்பு : ‘நீட்’ தேர்வெழுத அனைத்து தேர்வு மையங்களுக்கும் காலை 10 மணியிலிருந்தே மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் களுடன் வரத்தொடங்கினர். காலை 11 மணிக்குப் பிறகு தேர்வுக் கூடங்களுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் தேர்வெழுதச் சென்ற நிலையில் அவர்களுடன் வந்த பெற்றோர்கள் தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் அமர் வதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யாததால் சுட்டெரித்த வெயிலால் ஒதுங்க இடம் தேடி அலைந்தனர்.

காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, வேலூர் சாயிநாதபுரம் என்.கிருஷ்ணசாமி முதலியார் பள்ளி, மற்றும் டிகேஎம் மகளிர் கல்லூரி, காட்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையங்களுக்கு வந்த பெற்றோர் நிழல் தேடி அவதிப்பட்டனர். மாணவ, மாணவிகளுடன் வந்த பெற்றோர் அமர்வதற்கும், குடிநீருக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

உதவிய எஸ்ஐ : வேலூர் சாயிநாதபுரம் டிகேஎம் மகளிர் கல்லூரிக்கு வந்த மாணவி ஒருவர் தேர்வு மையம் மாறி வந்தது தெரியவந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்ற மாணவியை அங்கிருந்த வேலூர் போக்கு வரத்து காவல் உதவி ஆய்வாளர் ரஜினி ஆறுதல் படுத்தியதுடன் தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு அருகிலிருந்த என்.கிருஷ்ணசாமி முதலியார் அரசு நிதியுதவி பள்ளி தேர்வு மையத்துக்குச் சரியான நேரத்துக்கு அழைத்துச் சென்றார். குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு மையத்துக்குள் சென்ற தால் அங்கிருந்த பெற்றோர் எஸ்ஐ ரஜினியின் செயலை பாராட்டினர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 4 மையங்களில் அமைக்கப்பட் டிருந்த 6 தேர்வுக்கூடங்களில் ‘நீட்’ தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1,164 மாணவர்கள் மற்றும் 1,956 மாணவிகள் என மொத்தம் 3,120 பேர் தேர்வெழுதத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங் கப்பட்டது. தேர்வு நாளான நேற்று 1,125 மாணவர்கள், 1,895 மாணவிகள் என மொத்தம் 3,020 பேர் தேர்வெழுதினர். மேலும், 39 மாணவர்கள், 61 மாணவிகள் என மொத்தம் 100 பேர் தேர்வுக்கு வரவில்லை.

‘நீட்’ தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள் எவ்வித ஆபர ணங்கள் அணிந்து செல்லக்கூடாது எனக் கூறப்பட்ட நிலையில், திருவண்ணாமலை அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் அரைஞாண் கயிறு அணிந் திருந்தார். அதை அவிழ்த்த பிறகே அந்த மாணவரை உள்ளே செல்ல காவல் துறையினர் அனுமதித்தனர். அதேபோல், டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்கு 5 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்கள் தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக் கப்படவில்லை. நீண்ட நேரம் அவர்கள் கெஞ்சியும் அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் அங்கிருந்து கவலையுடன் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x